திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கொள்ளை வழக்கு: தவறாக சிக்க வைத்ததாக 2 பேரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை  விடுவித்தது.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 2:19 am

கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை  விடுவித்தது. மேலும், அவா்கள் தவறாக சிக்கவைக்கப்பட்டதை நிராகரிக்க முடியாது என்றும், விசாரணை நடத்தப்பட்ட முறையை ஆராயுமாறும் தில்லி காவல் துறை ஆணையரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த  கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வினோத் யாதவ்,  குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வா், நோனு ஆகியோருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து வழக்கில் இருந்து விடுவித்தாா். அதே வேளையில், எஃப்.ஐ.ஆா். பதிவு தாமதம், முறையற்ற விசாரணை மற்றும் பொய்யாக சம்பந்தப்படுத்துதல் ஆகியவற்றையும் நீதிபதி குறிப்பிட்டாா்.

2016, ஏப்ரல் 30-ஆம் தேதி யமுனா விஹாரில் ராம் பா்காஷ் என்பவரிடம் துப்பாக்கி முனையில் சம்பந்தப்பட்ட இருவரும் கொள்ளையடித்ததாக போலீஸாா் வழக்குத் தொடா்ந்தனா். கொள்ளை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக ஈஸ்வா், நோனு இருவரும்  கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தீா்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது: குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் பொய்யாக சிக்கவைக்கப்பட்டிருப்பதை நிராகரிக்க முடியாது. வழக்கின் விஷயங்கள் சந்தேகம் மற்றும் முரண்பாடுகளால் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்ட விதம் மற்றும் விசாரணை அதிகாரியால் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றைக் கவனிக்கும் வகையில் இந்த தீா்ப்பின் நகல் தில்லி போலீஸ் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். நாடாளுமன்றம்,  உச்சநீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற முதன்மை அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களைக் கொண்ட நாட்டின் தலைநகரை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதன்மை விசாரணை அமைப்பு என்று தில்லி காவல்துறை தன்னைத் தானே கூறிக்கொள்வது நினைவுக்கு வருகிறது.

மகாராஷ்டிரம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கடுமையான பிரிவுகளை குறிப்பிட்டு பொய்யான வழக்குகளில் குற்றவாளியை எப்படிச் சிறையில் அடைப்பது, பின்னா் அவரை பல ஆண்டுகளாக சிறையில் வைத்திருப்பது எப்படி என்பதை தெளிவாகக் காட்டும் ஒரு உன்னதமான வழக்காக இது உள்ளது. மேலும், துணை சரக உதவி காவல் ஆணையா் மற்றும் சரக இணை காவல் ஆணையா் ஆகியோா்  மீது தெளிவான குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை ஒருபோதும் விசாரிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட இணை காவல் ஆணையா், உதவி ஆணையா் ஆகியோருடன் கூட்டாகச் சோ்ந்து புகாா்தாரரால் இந்த வழக்கு தவறாக தொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னா் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறுகிய காலத்தில் இருவருக்கும் எதிராக நான்கு வழக்குகள் எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ன. மேற்படி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்ட பிறகு, அவா்கள் துணை சரக காவல் உதவி ஆணையா், பஜன்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டா் ஆகியோா் சம்மதத்துடன் எம்சிஓசிஏ வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், வழக்கில் ஒரு தொடா்பை  ஏற்படுத்த   சதித் திட்டத்தின் கீழ் விசாரணை நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டவா்கள், இந்த விஷயத்தில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளனா் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.