திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தில்லியில் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம்!

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த 6-7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் இருந்ததால் புழுக்கம் நிலவியது.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 2:17 am

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த 6-7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் இருந்ததால் புழுக்கம் நிலவியது.

தில்லியில் இரு தினங்களாக மிதமான வெயிலின் இருந்தது. இது வியாழக்கிழமையும் நீடித்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, தில்லியில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 26.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி அதிகரித்து 36.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 65 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாகவும் இருந்தது.

இதுவரை 63.2 மி.மீ மழை: மாலை 7.25 மணியளவில் நகரில் காற்றின் தரக் குறியீடு 116 என்ற அளவில் பதிவாகி மிதமான பிரிவில் காற்றின் தரம் காணப்பட்டது. இதற்கிடையே, அடுத்த 6-7 நாள்களுக்கு தில்லியில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரில் இந்த மாதம் இதுவரை 63.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக ஆகஸ்டில் தில்லியில் 247.7 மி.மீட்ட மழை இருக்கும். தில்லியில் ஆகஸ்டில் வழக்கமான மழை அளவு பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பு கணித்திருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) வானம் பகுதி அளவு மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.