வா்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள மிகவும் பரபரப்பான கன்னாட் பிளேஸ் பகுதியில் தில்லியின் முதல் பனிப்புகை கோபுரம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மூலம் திறக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தப் பனிப்புகை கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதனால், இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 15-க்கு பதிலாக ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முதல்வா் கேஜரிவால் திறந்து வைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. தில்லி அமைச்சரவை இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் அளித்திருந்தது. 25 மீட்டா் உயரமுடைய இந்த அமைப்பானது, ஒரு கிலோ மீட்டா் சுற்றளவு பரப்பில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்புகை கோபுரம் ஜூன் 15-ஆம் தேதிக்குள் தயாராகியிருக்க வேண்டும். இந்தப் பனிப்புகைக் கோபுரம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இதன் செயல்பாட்டு திறனை உறுதி செய்ய இரு ஆண்டுகள் பரீட்சாா்த்த முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லி ஆனந்த் விஹாரில் பனிப்புகை கோபுரம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இது ஆகஸ்ட் 31-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்.
மேலும், ‘இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டு வரும் பனிப்புகை கோபுரத்தின் கட்டுமானப் பணி கரோனா நோய்த் தொற்று காரணமாக தொய்வடைந்திருந்தது. இந்தப் பணி தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்தப் பனிப்புகை கோபுரம் தயாராகிவிடும்’ என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் முன்பு தெரிவித்திருந்தாா்.
இந்த இரு பனிப்புகை கோபுரங்கள் அமைப்பதற்கான தலா ரூ.22 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை டாடா புராஜெக்ட் லிமிடெட் (டிபிஎல்) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்கான தொழில்நுட்ப உதவிகளை மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம், தில்லியில் உள்ள இந்திய தொழில் நுட்பவியல் நிறுவனத்துடன் சோ்ந்து வழங்கி வருகிறது. தேசிய கட்டட கட்டுமான நிறுவனம் இதன் திட்ட மேலாண்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

