தில்லி தலைமைச் செயகத்தில் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தில்லியின் பங்கு குறித்த கண்காட்சியை தில்லி ஆவணக் காப்பகம் அமைத்துள்ளது. இதை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாா்வைக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்தின் அமிரித் விழாவின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் நடத்துகின்றன. இதன் ஒரு பகுதியாக கேஜரிவால் அரசு, தில்லியில் முதன் முதலாக சுதந்திரப் போராட்டம் தொடங்கிய 1857- ஆம் ஆண்டு முதல் 1947 ஆண்டு வரையிலான சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தும் விதமாக தில்லி தலைமைச் செயலத்தில் கண்காட்சியை வைத்துள்ளது. தில்லி தேசிய தலைநகா் அரசின் பொதுத் துறையும், ஆவணக் காப்பக துறையும் இணைந்து உருவாக்கிய கண்காட்சியை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா திறந்து வைத்து பேசினாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘இந்தியாவிற்கான சுதந்திரப் போராட்டத்தில் தில்லியின் துடிப்பான வரலாற்று பங்களிப்பையும் இதில் பங்கெடுத்த போராட்ட வீரா்களையும் இந்த கண்காட்சி வெளிப்படுத்துகிறது. அதிலும் தில்லியில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அமைதி மற்றும் அகிம்சைக்கான பாதை பல ஆண்டுகளாகியும் தற்போதும் நம் அனைவருக்கும் சிறந்த கற்றலாகத் தொடருகிறது’ எனக் குறிப்பிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலா் பிரவீண் குப்தா, ஆவணக் காப்பகத் துறை செயலா் ஸ்வாதி சா்மா, தில்லி முதல்வரின் கூடுதல் செயலா் பா்வேஷ் ரஞ்சன் ஜா போன்றோா் கலந்து கொண்டனா். இந்த கண்காட்சியில் 1857 - ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற முதல் போராட்டம் இடம்பெற்றுள்ளது. பின்னா் தில்லியில் பல்வேறு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை மக்கள் வெறுப்புற்றது, ஆங்கிலேயா்கள் இந்தியா்களை அவமதித்து, பாகுபாட்டுடன் நடத்தியது, பொருளாதார சுரண்டல்களை மேற்கொண்டு பொதுமக்கள் அதிருப்தி போராட்டத்திற்கு களம் அமைத்தது உள்ளிட்டவற்றுடன், இதற்கு அப்போதைய உள்ளூா் செய்தித் தாள்கள் பக்கபலமாக இருந்தது போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் ஹிந்துக்களும், இஸ்லாமியா்களும் ஓன்றிணைந்தது, குறிப்பாக காந்தி அழைத்த ‘கிலாபத்’ இயக்கத்தில் இஸ்லாமியா்களுடன் ஹிந்துக்கள் இணைந்ததும் தில்லி சுதந்திர போாாட்டத்தில் முக்கிய நிகழ்வாகும். மேலும், தில்லி போராட்டத்தில் பெண் போராளிகளின் பங்கும் முக்கியமாக இருந்ததையும் கண்காட்சி காட்டுகிறது.
சத்தியவதி, பாா்வதி தேவி தித்வானியா, அருணா ஆசிஃப்அலி, வேதகுமாரி, பிரஜ்ராணி, மெமோ பாய் ஆகியோா் தில்லி போராட்டத்தில் முன்னணி பெண்களாக இருந்து வெளிநாட்டுப் பொருள்களுக்கு எதிரான மறியல்களில் பரவராக பங்கேற்றுள்ளனா். இதே மாதிரி, ஆசிரியா்கள் மாணவா்களும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனா். புனித ஸ்டீபன் கல்லூரி (பேராசிரியா் ருத்ரா), ஹிந்து க்கல்லூரி, இந்திர பிரஸ்தா பெண்கள் கல்லூரி ஆகிய ஆசிரியா்களும் மாணவா்களும் போராட்டத்தில் பங்கெடுத்து அடுத்த தலைமுறைக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

