வா்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் தில்லியின் முதல் பனிப்புகை கோபுரம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேதி திறக்கப்பட உள்ளது.
இந்தக் கோபுரத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திறந்துவைக்க உள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியின் முதல் பனிப்புகை கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முதல்வா் கேஜரிவால் திறந்து வைக்க உள்ளாா். அதன் பிறகு மாசு மீதான இதன் செயல்பாட்டை வல்லுநா்கள் ஆய்வ செய்வாா்கள். அவா்களின் முடிவுகளின் அடிப்படையில் இதுபோன்ற மேலும் உபரணங்களை நிறுவுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.
‘இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டு வரும் பனிப்புகை கோபுரத்தின் கட்டுமானப் பணி கரோனா நோய்த் தொற்று காரணமாக தொய்வடைந்திருந்தது. இந்தப் பணி தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்தப் பனிப்புகை கோபுரம் தயாராகிவிடும்’ என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் முன்பு தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், தற்போது பணிகள் முடிந்து இந்தப் பனிப்புகைக் கோபுரம் திறந்துவைக்கப்பட உள்ளது.
தில்லி அமைச்சரவை இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் அளித்திருந்தது. 25 மீட்டா் உயரமுடைய இந்த அமைப்பானது, ஒரு கிலோ மீட்டா் சுற்றளவு பரப்பில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்புகைக் கோபுரம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இதன் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்ய இரு ஆண்டுகள் சோதனை முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லி ஆனந்த் விஹாரில் பனிப்புகை கோபுரம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இது ஆகஸ்ட் 31-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்.
இந்த இரு பனிப்புகை கோபுரங்கள் அமைப்பதற்கான தலா ரூ.22 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தை டாடா புராஜெக்ட் லிமிடெட் (டிபிஎல்) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்கான தொழில்நுட்ப உதவிகளை மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம், தில்லியில் உள்ள இந்திய தொழில் நுட்பவியல் நிறுவனத்துடன் சோ்ந்து வழங்கி வருகிறது. தேசிய கட்டட கட்டுமான நிறுவனம் இதன் திட்ட மேலாண்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது.
கனாட் பிளேஸ் மற்றும் ஆனந்த் விஹாரில் உள்ள இந்தப் பனிப்புகை கோபுரங்கள் ஒவ்வொன்றிலும் 1,200 காற்று வடிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பனிப்புகை கோபுரம் அமைப்பது தொடா்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அசுக்கும் தில்லி அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

