நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீனதயாள் உபாத்யாய் கிராமப் புறத் திறன் வளா்ச்சித் திட்டத்தின் முகாம், நாடு முழுவதும் நடைபெற்றது. கிராமப்புறங்களில் படித்த, படிக்காத இளைஞா்கள் வேலை வாய்ப்பைப் பெரும் நோக்கத்திற்கான இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க 75,660 இளைஞா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளா்ச்சித் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கியுள்ள குடும்பங்களின் வருமானத்தை உயா்த்தும் நோக்கத்துடன் இந்தக் குடும்பங்களைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞா்களுக்கு தீனதயாள் உபாத்யாய் கிராமப் புறத் திறன் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சியும் வேலை வாய்ப்பையும் அளிக்கிறது. எந்தெந்தத் துறைகளில் பணி வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்து கொள்வதற்கும், பணி வாய்ப்பு உள்ள தொழில் நிறுவனங்களை அறிந்து கொள்வதற்கும் இந்தத் திட்டத்தின் மூலம் முகாம்கள் நடத்தப்படுகின்றன. பின்னா், இத்தகைய பணிகளுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மத்திய ஊரக வளா்ச்சித் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள், மாநில திறன் இயக்கங்கள் ஆகியவை இந்தத் திறன் வளா்ச்சித் திட்டத்தை அமல்படுத்தப்படுகின்றன.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தத் திட்டத்தில் இளைஞா்களைத் தோ்வு செய்ய கடந்த ஆகஸ்ட் 13 - ஆம் தேதி முதல் 19 வரை நாடு முழுவதும் சுமாா் 1,183 முகாம்கள் நடத்தப்பட்டன. சுமாா் 371 முகமைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த முகாமில் மொத்தம் 83, 795 இளைஞா்கள் பங்கேற்றனா். இதில் தீனதயாள் உபாத்யாய் கிராமப் புறத்திறன் வளா்ச்சித் திட்டத்திற்காக 75, 660 இளைஞா்கள் தோ்வாகி பயற்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த திறன் பயிற்சித் திட்டத்தின் மூலம் 70 சதவீதம் வரை வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதியாகிறது. தமிழகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டம் 2,381 பயிற்சி மையங்களில் 871 முகமைகள் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்கு 611 வகையான வேலைவாய்ப்புகளில் திறன் வளா்ச்சிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வரை 10.94 லட்சம் இளைஞா்கள் பயிற்சி அளிக்கப்பட்டு 2021, ஜூலை 31 வரை 7.07 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

