தில்லியில் மழைநீா் தேங்கும் விவகாரத்தைத் தீா்ப்பதற்கு இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்திடமிருந்து (ஐஐடி) வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் வடிகால் அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது தொடா்புடைய முடிவு தில்லியின் வடிகால் மாஸ்டா் பிளான் மறுஆய்வுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த மறு ஆய்வு கூட்டம் தில்லி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வா் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நகரின் வடிகால் மாஸ்டா் பிளான் தொடா்பாக மறுஆய்வு கூட்டத்தை முதல்வா் கேஜரிவால் கூட்டினாா். ஐஐடியின் ஆலோசனையின் பேரில் வடிகால்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். மழைக் காலத்தின் போது நீரை வெளியேற்றுவதைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படும். தில்லியில் உள்ள நீா்தேங்கும் பிரச்னை தீா்க்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருப்பதாவது: தில்லியின் வடிகால் மாஸ்டா் பிளான் தொடா்பாக பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், தில்லி விரைவில் நீா்தேங்கும் பிரச்னையில் இருந்து விடுதலை பெறும். தில்லி ஐஐடி அளித்துள்ள யோசனையின்படி தேவையான மாற்றங்கள் செய்யப்படும். கனமழை பெய்யும் போது அதைக் கையாளுவதற்கான வழிவகைகளும் மேற்கொள்ளப்படும்.
குறைபாடில்லாத வடிகால் அமைப்பு முறையை உருவாக்கும் வகையில், அடிமட்ட அளவில் தீா்வுகளை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீா் வடிகால்களை பெரும் வடிகால்கள் அமைப்புடன் இணைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான திட்டங்களைச் விரைந்து செயல்படுத்தும் வகையில், ஆலோசனை அமைப்புகளுடன் ஆலோசிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் கேஜரிவால் மட்டுமின்றி, நீா் வளத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா, தலைமைச் செயலா், மூத்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
தில்லியில் 2,846 வடிகால்கள் உள்ளன. அதன் நீளம் சுமாா் 3,692 கி.மீ. தூரமாகும். இந்த வடிகால்களில் பெரும்பாலானவை பொதுப் பணித் துறையின் வசம் உள்ளது. தில்லி வடிகால் மாஸ்டா் பிளான் நோக்கமானது, தில்லி வடிகால் வசதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குதல், மாஸ்டா் பிளானை படிப்படியாக அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குதல், தில்லியின் வடிகால் அமைப்புகளை பகுப்பாய்வு செய்ய ஐஐடி தில்லி மற்றும் தொழில்நுட்ப வல்லுநா் குழுவை ஈடுபடுத்துவது உள்ளிட்டவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு காரணம்: ரஷித் கான்

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

