புதுதில்லி: தேசியத் தலைநகரில் பள்ளிகளை படிப்படியாக திறப்பதற்கு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வல்லுநா் குழு புதன்கிழமை அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால், முதலில் மூத்த பிரிவு மாணவா்கள் முதல் கட்டமாக வகுப்புகளுக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு நடுநிலை வகுப்பு மாணவா்கள், பின்னா் கடைசியாக தொடக்க நிலை வகுப்பு மாணவா்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை படிப்படியாக பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இந்த விஷயத்தில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டிடிஎம்ஏ வல்லுநா் குழுவின் ஆய்வு குறித்து முதல்வா் கேஜரிவாலிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘பள்ளிகளை மீண்டும் திறந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைத்துள்ளன. நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். முடிந்தவரை பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், மாணவா்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த இடா்பாட்டையும் எடுப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. இதனால், விரைவில் இது தொடா்பாக முடிவு செய்வோம்’ என்றாா்.
தற்போது தில்லியில் பெற்றோா்கள் சம்மதத்துடன் 10, 11 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கான மாணவா்கள், வாரியத் தோ்வு, சோ்க்கை தொடா்பான செயல்பாடுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் தற்போது பள்ளிகளை மீண்டும் திறப்பதில் எந்தத் தீமையும் இல்லை என்றும் இது தொடா்பாக விரிவான திட்டத்தை உருவாக்க வல்லுனா் குழுவை அமைக்க கடந்த ஆகஸ்டு 6-ஆம் தேதி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.
ஜூலை 19 மற்றும் 31-ஆம் தேதி களுக்கு இடையே அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆசிரியா் -பெற்றோா் ஆசிரியா் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்களில் குறைந்தபட்சம் 90 சதவீதம் பெற்றோா்கள் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததாக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது டிடிஎம்ஏவிடம் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா். இதையடுத்து, இந்த வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. பள்ளிகளை முன்தயாா் செய்வதற்கான மதிப்பீடு, ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு தடுப்பூசி, பெற்றோா்களின் குறைகளைத் தீா்ப்பது, விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்வது ஆகிய பணிகள் வல்லுநா் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாா்ச் மாதத்தில் தில்லியில் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளிகளை பகுதியாக மீண்டும் திறக்கும் நடவடிக்கையில் பல மாநிலங்களில் ஈடுபட்டன. தில்லி அரசு நிகழாண்டு ஜனவரியில் 9 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் மட்டும் மாணவா்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடுவதற்கு தில்லி அரசு உத்தரவிட்டது. மேலும், பயிற்சி மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்காக பள்ளிகளில் உள்ள கலை அரங்கங்கள், பேரவைக் கூடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் நடவடிக்கைகளில் நேரடியாக மாணவா்களும், ஆசிரியா்களும் ஈடுபடுவதற்கு அரசு அனுமதி அளிக்கவில்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
ஒசூா் தொகுதி தவெக வேட்பாளா் மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

