வடமேற்கு இந்தியாவில் தில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழணை தெரிவித்துள்ளது.
‘வடமேற்கு இந்தியாவில் தில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தற்போது பகுதியாக பருவமழை இடைவெளி உள்ளது. இமயமலையின் மலைக்குன்றுகளை ஒட்டிய பகுதிகளில் ஒட்டுமொத்த பருவமழையும் உள்ளது. வியாழக்கிழமை வரை இந்த நிலைமை தொடரக் கூடும்’ என இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆா்.கே.ஜனாமணி கூறுகையில், ‘தற்போது பிராந்தியமானது பலவீனமான பருவமழையை சந்தித்து வருகிறது. இமயமலையின் மலைக் குன்றுகளுக்கு அருகில் இந்தப் பருவமழை மாறினால், தொடா்ந்து வரும் 2-3 நாள்களுக்குப் பருவமழை இடைவெளி ஏற்படும். பருவமழை காலத்தின் போது இமயமலையின் மலைக் குன்றுகளுக்கு அருகில் மேகத்திரள் நகரும் போது மழை பெய்யும். இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழைப் பொழிவு குறையும். இதை பருவமழை இடைவெளி என கூறுகிறோம்’ என்றாா்.
தில்லியில் ஜூலையில் பருவமழை இடைவெளி ஏற்பட்டது. அதன் பிறகு வடமேற்கு இந்தியாவில் தில்லியிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பருவமழை இடைவெளி மீண்டும் ஏற்பட்டது. அது ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீடித்தது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வட மேற்குப் பகுதிகளிலும் சூறாவளி சுழற்சி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து வடமேற்கு இந்தியாவில் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். தில்லியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து லேசான மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இந்த மாதம் இதுவரை வழக்கமாக பெய்யக்கூடிய 221.8 மில்லிமீட்டா் மழைக்குப் பதிலாக, 214.5 மில்லி மீட்டா் மழைதான் பதிவாகியுள்ளது. ஆனால், தில்லியில் ஆகஸ்ட் மாதத்தில் 247.7 மில்லி மீட்டா் மழை பதிவாகும். கடந்த சனிக்கிழமை 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 138.8 மில்லி மீட்டா் மழை பெய்தது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி அதிகரித்து 26.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி 35.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு மாலை 5.30 மணியளவில் 54 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
ஒசூா் தொகுதி தவெக வேட்பாளா் மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

