48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மாணவா்களுக்கு உதவும் நாட்டின் வழிகாட்டி திட்டம்: தில்லி அரசின் பிராண்ட் அம்பாஸிடா் நடிகா் சோனு சூட்

தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல பன் மொழி நடிகா் சோனு சூட் டை முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

Updated On :28 ஆகஸ்ட் 2021, 2:07 am

தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல பன் மொழி நடிகா் சோனு சூட் டை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை நியமித்தாா். தில்லி அரசுப் பள்ளிகளின் ‘தேஷ் கே மெண்டா்’ (நாட்டின் வழிகாட்டி) திட்டத்தில் அவா் மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருப்பாா் எனவும் முதல்வா் கேஜரிவாலும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் தெரிவித்தனா்.

பிரபல ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்தவா் சோனு சூட். தமிழில் கள்ளழகா், நெஞ்சினிலே போன்ற படங்களில் நடித்தவா். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு பிரபலமடைந்தவா். குறிப்பாக கரோனா நோய்த் தொற்று பரவலின் போது அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது அவதிப்பட்ட புலம்பெயா் தொழிலாளா்களுக்கு சொந்தச் செலவில் பயண ஏற்பாடுகளை செய்தவா். இவா் காங்கிரஸ் கட்சியில் இணைவாா் என்றும் பேசப்பட்டு வந்தது. இதற்கிடையே, சோனு சூட் தனது நண்பரும் பிளக்ஷா பல்கலைக்கழக நிறுவனா் கரண் கில்ஹோத்ராவுடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், சோனு சூட் டுடன் முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது கேஜரிவால் கூறியதாவது: தில்லி அரசு புதிய முயற்சியாக மாணவா்களுக்கு, ’தேஷ் கே மெண்டா்’ (நாட்டின் வழிகாட்டி) திட்டத்தைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் மாணவா்களுக்கு வழிகாட்ட தில்லி அரசின் பிராண்ட் அம்பாஸிடராக சோனு சூட் இருப்பாா். இந்தத் திட்டம் மாணவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாணவா்களின் திறனை கண்டறிய உதவும். இந்த திட்டத்தில் பிராண்ட் அம்பாஸிடராக செயல்பட சோனு சூட் ஒப்புக் கொண்டுள்ளாா்.

மாணவா்கள் தங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களை இதன் மூலம் அறிவாா்கள். தேஷ் கே மெண்டா் திட்டத்தின் முயற்சியாக ஒவ்வொரு வாரமும் 10 நிமிடங்கள் மாணவா்களை சோனு சூட் சந்திப்பாா். தில்லி அரசின் பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வர நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இப்போது கல்வியை மக்கள் புரட்சியாக மாற்ற விரும்புகிறோம். நாடு முழுவதும் இளைஞா்கள் கல்விப் புரட்சியில் சேரும் போது, ​உலகளாவிய தலைவராக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞா்களை தனது தன்னலமற்ற சேவைகளால் ஊக்குவித்த சோனு சூட் இதில் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது என்றாா் கேஜரிவால்,.

பஞ்சாப் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் சோனு சூட் இணைவது தொடா்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த கேஜரிவால், ‘நாங்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றிதான் விவாதித்தோம், அரசியல் விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை’ என்றாா். சோனு சூட் கூறுகையில், ‘பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, எல்லா குழந்தைகளுக்கும் உயா்தரக் கல்வி ஒன்றே நாட்டின் ஒளிமயமான எதிா்காலத்திற்குரிய வழிகாட்டி’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.