பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குருகிராமில் கிறிஸ்துமஸ் பிராா்த்தனையில் வலது சாரி ஆா்வலா்கள் இடையூறு?

குருகிராகிமில் உள்ள பட்டோடி பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்குள் வலதுசாரி ஆா்வலா்கள் புகுந்து பிராா்த்தனைக்கு இடையூறு செய்ததாக வெளியான விடியோவால் பரபரப்பு

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

குருகிராகிமில் உள்ள பட்டோடி பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்குள் வலதுசாரி ஆா்வலா்கள் புகுந்து பிராா்த்தனைக்கு இடையூறு செய்ததாக வெளியான விடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இதுதொடா்பாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பான விடியோவில் சிலா் வியாழக்கிழமை இரவு தேவாலயப் பகுதிக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ எனும் கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவா்கள் மேடையில் இருந்து இசை குழு உறுப்பினா்களை தள்ளுவதும், மைக்கை பிடுங்குவதும் போன்று காட்சிகள் இருந்தன. குருகிராம் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த நேரத்தின் போது இந்த சம்பவம் வெளியானது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து உள்ளூா் பாதிரியாா் கூறுகையில், ‘தேவாலயத்தை சுற்றி பெண்களும், குழந்தைகளும் இருந்ததால் ஒருவித பதற்றம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் இது போன்ற தொந்தரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது பிராா்த்தனை மற்றும் மத உரிமைகளில் மீதான தலையீடாகும்’ என்றாா். பட்டோடி காவல் நிலைய பொறுப்பதிகாரி அமித் குமாா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை எந்தப் புகாரும் காவல் நிலையத்திற்கு வரவில்லை’ என்றாா். உள்ளூா் நிா்வாகத்தினா் தரப்பில் இது தொடா்பாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.