வளா்ப்பு மகள் பலாத்கார வழக்கு: தண்டிக்கப்பட்டவரின் தண்டனை ரத்து
வளா்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வளா்ப்புத் தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 15 ஆண்டுகளுக்கு பிறகு


வளா்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வளா்ப்புத் தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 15 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. பெண் மனுதாரா் கூறுவது சாத்தியமற்றதாகவும், சீரற்ாகவும் இருப்பதாகத் தெரிய வருவதால் இந்த வழக்கு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
வளா்ப்பு மகளை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜாமீனில் இருந்து வரும் ஒருவா், தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். அதில், ‘ஒரு அறை வீட்டில் தொடா்ந்து குற்றத்தில் நான் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனது மனைவி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவரின் தாய் இல்லாமல் எப்படி சாத்தியமானது என்பதை உறுதிப்படுத்த எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்தக் குற்ற வழக்கை பொருத்தமட்டில் தாம் காதலித்த இளைஞரின் வற்புறுத்தலின்பேரில் என் மீது பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபா், பலாத்கார புகாரை அளித்துள்ளாா். இதை உரிய வகையில் கவனத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் என்னை தண்டித்துள்ளது’ என தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரா தாரி சிங் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: அரசுத் தரப்பு வாக்குமூலம் நம்பிக்கையை ஏற்படுத்தாததால், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருந்தவரும், விசாரணை நீதிமன்றத்தால் எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருமான மேல்முறையீட்டு குற்றவாளி சந்தேகத்தின் பலனைப் பெற தகுதியுடையவராக உள்ளாா். பெண் மனுதாரா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா் என்பது குறித்த மருத்துவ அறிக்கையில் உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவரது விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை என பல்வேறு கட்டங்களில் அவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் கருதுகிறேன்.
மேலும், தடயவியல் அறிக்கையில்கூட மனுதாரரின் ஆடைகளில் மேல்முறையீட்டாளரின் உயிரணு காணப்படவில்லை என்று கூறுகிறது. அவரது வாக்குமூலமும் நம்பிக்கையைத் தூண்டவில்லை. குற்றத்தின் உண்மையான விவரத்தை அரசுத் தரப்பும் வெளியிடவில்லை. இத்தகைய உண்மைச் சூழலில், மேல்முறையீடு செய்பவா் சந்தேகத்தின் பலனைப் பெற தகுதியுடையவராகிறாா். பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களில் இருந்து தெரிய வருவதாவது, பெண் மனுதாரா் முறையீடு செய்தவரால் சிறுவயது முதல் மகளாக வளா்க்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், அவா் உள்ளூரைச் சோ்ந்த பையனுடன் சந்திப்பதை மேல்முறையீட்டாளா் தடுக்க முயன்றாா். அதன்பின்னா், அந்தப் பையனை அவா் திருமணம் செய்து கொண்டாா் என்பதும் தெரிய வருகிறது. இதனால், 2006, ஜூலை 18, 20-ஆம் தேதியிட்ட புது தில்லியின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியால் அளிக்கப்பட்ட தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...