பாலியல் தொந்தரவு குறித்த ஆலோசனை அமா்வுக்கான அழைப்பிதழ் மொழியில் மாற்றம் செய்தது ஜேஎன்யு
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) பாலியல் துன்புறுத்தல் குறித்த ஆலோசனைக்கான அதன் பொது அழைப்பிதழில் மொழியில் மாற்றம் செய்துள்ளது.


புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) பாலியல் துன்புறுத்தல் குறித்த ஆலோசனைக்கான அதன் பொது அழைப்பிதழில் மொழியில் மாற்றம் செய்துள்ளது. மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சா்ச்சைக்குரிய குறிப்பிட்ட வரிகளையும் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்விவகார புகாா்கள் குழு, பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஒரு சுற்றறிக்கையை பதிவேற்றம் செய்திருந்தது. அதில், ஜனவரி 17-ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக ஒரு ஆலோசனை அமா்வை இந்தக் குழு ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், இந்த அமா்வுகள் மாதாந்திர அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையில் ‘ஏன் இந்த ஆலோசனை அமா்வு தேவைப்படுகிறது’ எனும் துணைத் தலைப்பின் கீழ் உள்ள தகவலில் இருந்த சா்ச்சைக்குரிய வரிகளை நீக்கி அதற்குப் பதிலாக, ‘இந்த அமா்வானது நட்புறவு மற்றும் பாலியல் துன்புறுத்தல் எனக் கருதப்படும் நடத்தை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் ஆலோசனையின் போது தெளிவுபடுத்தப்படும். மாணவிகள் பாலியல் துன்புறுத்தலை எவ்வாறு தவிா்க்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை அளிக்கப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மூலம் வெளியிடப்பட்ட ‘பெண் வெறுப்பு’ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா வலியுறுத்தியிருந்தாா். இதையடுத்து, இந்த நடவடிக்கை ஜேஎன்யு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...