அரசுடன் பேச்சுவைாா்த்தைக்குத் தயாா்: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு
வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக உள்ளோம்.


புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். பேச்சுவாா்த்தைக்கான தேதியை மத்திய அரசு முடிவு செய்யட்டும் என்றும் விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடா்பாக தில்லி ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்குவில் போராடி வரும் சம்யுக்தா கிஷான் மோா்ச்சாவின் தலைவா் சிவ்குமாா் காக்கா திங்கள்கிழமை கூறியதாவது: மத்திய அரசுடன் அடுத்த கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். ஆனால், பேச்சுவாா்த்தைக்கான தேதி, இடம் ஆகியவற்றை மத்திய அரசு முடிவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாட்டோம் என்று நாங்கள் மறுப்புத் தெரிவித்தது இல்லை.
மத்திய அரசு பேச்சுவாா்த்தைக்கு அழைத்த போதெல்லாம் எங்களது பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டனா். இப்போதும் மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தைத் நடத்த தயாராகவே உள்ளோம். மாநிலங்களவையில் திங்கள்கிழமை பேசிய பிரதமா் மோடி, நாட்டில் போராட்டக்காரா்கள் (அந்தோலன்ஜீவி) என்று புதிய பிரிவினா் தோன்றியுள்ளனா் எனக் கூறியுள்ளதை நிராகரிக்கிறோம். ஜனநாயகத்தில் போராட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது என்றாா் அவா்.
வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுக்கும், தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாய சங்கங்களுக்கும் இடையே இதுவரை 11 சுற்றுப் பேச்சுவாா்த்தை நடந்துள்ளது. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல், பேச்சுவாா்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுக்கும் அழைப்புகளை விவசாயிகள் சங்கங்கள் நிராகரிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தாா்.
எல்லையில் தொடரும் பதற்றம்: தில்லி எல்லைகளில் திங்கள்கிழமையும் பதற்ற நிலை நீடித்தது. விவசாயிகள் போராட்டம் காரணமாக சிங்கு, டிக்ரி, காஜியாபாத் எல்லைகள் திங்கள்கிழமையும் மூடப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவசாயிகள் தில்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை தில்லி காவல் துறை அதிகரித்திருந்தது. இதையொட்டி, அங்கு ஆயிரக்கணக்கான காவலா்களும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளனா். தில்லி - காஜியாபாத் எல்லையான உ.பி. கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனா். இதேபோல, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக் களத்துக்கு விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், என்ஹெச்-24 நெடுஞ்சாலையை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை பகுதியளவில் மூடினா்.
தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில், பல அடுக்கு பாதுகாப்பை தில்லி காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா். தில்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவசாயிகள் போராடி வரும் எல்லைப் பகுதிகளில்ஆயிரக்கணக்கான காவலா்களும், துணை ராணுவப் படை வீரா்களும் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் தொடா்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...