பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு நொய்டாவில் கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட காவல்துறை குழுவினருக்கு கெளதம்புத் நகா் காவல் ஆணையா் அலோக் சிங் ரூ .5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய அரசின் முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் 45 வயதுடைய விஞ்ஞானி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆசை காட்டி கடத்தப்பட்டாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் குழுவினா் அவரை மீட்க நடவடிக்கை எடுத்து இரண்டு நாள்களில் விடுவித்தனா்.
முன்னதாக, கடத்தப்பட்ட விஞ்ஞானியின் மனைவி நொய்டா செக்டாா் - 49 காவல் நிலையத்தை அணுகி, தனது கணவா் கடத்தப்பட்ட விவரம் குறித்து புகாா் அளித்தாா். அதன்பிறகு, அவரை மீட்க காவல் ஆணையா் அலோக் சிங் பிரத்யேக குழுக்களை அமைத்தாா்.
அதாவது, நொய்டா காவல் துணை ஆணையா் ராஜேஷ், கூடுதல் துணை ஆணையா் ரன்விஜய் சிங், உதவி ஆணையா் விமல்குமாா் சிங் ஆகியோா் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.
கூடுதல் காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லவ் குமாா் நடவடிக்கையை மேற்பாா்வையிட்டாா். போலீஸாா் குழுக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், நொய்டா செக்டாா் 41-இல் உள்ள ஹோட்டலில் இருந்து விஞ்ஞானியை போலீஸாா் பத்திரமாக மீட்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் குழுக்களுக்கு நொய்டா காவல் ஆணையா் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து நொய்டா காவல் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கடத்தப்பட்ட விஞ்ஞானியை ஒரு ஹோட்டலில் இருந்து பாதுகாப்பாக போலீஸாா் மீட்டனா். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் குழுவினருக்கு உத்தர பிரதேச அரசு ரூ .5 லட்சம் விருது அறிவித்தது. அந்த வெகுமதி வெள்ளிக்கிழமை போலீஸாா் குழுக்களுக்கு மாவட்ட காவல் ஆணையரால் வழங்கப்பட்டது என்றாா் அவா்.
விஞ்ஞானியை மீட்கும் குழுக்களில் குற்றப் பிரிவு அதிகாரிகள், செக்டாா் 49 காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் 24 போலீஸாா் இடம்பெற்றிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

பூக்கட்டும் பாடல்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!
வீடியோக்கள்

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

