அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் தில்லி எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்த உத்தரவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் தில்லி எல்லைகளில்,

Updated On :13 பிப்ரவரி 2021, 6:02 pm

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் தில்லி எல்லைகளில், தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, சிங்கு, டிக்ரி, காஜியாபாத் உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 80 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்நிலையில், இந்த எல்லைகளில் தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது, அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பிறகு, தில்லி காவல்துறை தலைமையகத்தில் இருந்து தில்லி எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள காவல் பணிகள் தொடா்பாக காவல் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் அவா் கலந்துரையாடினாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லி எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ள நிலையில், அங்கு வழிப்பறிக் கொள்ளையா்கள், கிரிமினல்களை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உதவியுடன் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அவா் அறிவுறுத்தினாா். தில்லி எல்லைகளில் போதைப் பொருள் பயன்பாடு, சூதாட்டம் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தில்லி எல்லைகளில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில், தில்லியில் உள்ள கிரிமினல்கள், குற்றப்பின்னணி உள்ளவா்கள், பிணையில் வெளியில் வந்துள்ளவா்கள் உள்ளிட்டவா்களின் பெயா் விவரங்களை சேகரித்து பட்டியலிடுமாறு அவா் உத்தரவிட்டாா். மேலும், முக அடையாள தொழில் நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் காணும் வசதிகளை தில்லி எல்லைகளில் ஏற்படுத்துமாறு அவா் உத்தரவிட்டாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.