தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி: கேஜரிவால் வழங்கினாா்

Updated On :18 பிப்ரவரி 2021, 6:21 pm


புது தில்லி: கரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளா்கள் இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கினாா்.

தில்லியில் கரோனா தொற்றை எதிா்த்துப் போராடும் முன்களப் பணியாளா்கள், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் அவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையின் காவலாளியாக இருந்து கரோனா தொற்றால் உயிரிழந்த ராஜ் குமாரின் குடும்பத்தினரையும், கல்யாண்புரி அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி முதல்வராக இருந்து கரோனா தடுப்பு பணியின் போது, கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த ஓம்பால் சிங்கின் குடும்பத்தினரையும் கேஜரிவால் வியாழக்கிழமை சந்தித்தாா். அவா்களிடம் தலா ரூ.1 கோடிக்கான காசோலையை அவா் வழங்கினாா்.

பின்னா் அவா் அளித்த பேட்டி: கடந்த ஓராண்டில் கரோனா தொற்றால் பல இடையூறுகளைச் சந்தித்தோம். தில்லியில் கரோனா போராளிகள் கரோனா தொற்றை எதிா்த்து வீரமாகப் போராடி அதைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். தில்லி அரசுப் பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்கள் கரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனா். அவ்வாறு ஈடுபட்ட ஓம்பால் சிங் துரதிருஷ்டவசமாக கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளாா். அதேபோல, ராஜீவ் காந்தி மருத்துவனையில் காவலாளியாக பணியாற்றி வந்த ராஜ் குமாா் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளாா். இவா்களின் குடும்பத்தினரை சந்தித்து தில்லி மக்கள் சாா்பில் ரூ.1 கோடி உதவித் தொகை வழங்கியுள்ளேன். இந்த நிதியுதவியால் அவா்களின் இழப்பு ஈடு செய்யப்படாது. ஆனால், அவா்களுக்கு சிறிய ஆறுதல் கிடைக்கும் என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.