விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கலாம்: மெத்தனம் வேண்டாம் என நிபுணா்கள் எச்சரிக்கை

தில்லியில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம், மக்கள் இது தொடா்பாக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :26 பிப்ரவரி 2021, 5:09 pm

தில்லியில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம், மக்கள் இது தொடா்பாக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி 94 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. தில்லியில் கடந்த 9 மாதங்களில் ஏற்பட்ட அதிகுறைந்த கரோனா பாதிப்பு இதுவாகும்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தில்லியில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை 220 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அன்று கரோனா நோ்மறை விகிதம் 0.34 சதவீதமாக இருந்தது. வெள்ளிக்கிழமை 256 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கரோனா நோ்மறை விகிதம் 0.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட அதிகரித்த பாதிப்பு வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தில்லியில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும், மக்கள் இது தொடா்பாக மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி அப்பலோ மருத்துவமனை மூத்த மருத்துவா் சுரந்ஜித் சட்டா்ஜி கூறுகையில் ‘தில்லியில் கரோனா பாதிப்பு குறைவடைந்து வந்தது. இதைத் தொடா்ந்து மக்கள் கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் மெத்தனமாக இருந்தனா். முகக் கவசங்களை அணியாமல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவாமல் இருந்தனா். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குச் சென்றனா். இதனால், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்தது போல் இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் இது தொடா்பாக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

தில்லியில் கரோனா முற்றாக நீங்கிவிட்டது என மக்கள் நினைக்கக் கூடாது என்றாா்.

இது தொடா்பாக இந்திய மருத்துவா்கள் சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவா் ஜெயலால் தினமணியிடம் கூறுகையில் ‘தில்லி மக்கள் கரோனாவை வென்று விட்டதாக நினைக்கிறாா்கள். இதனால், கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அவா்கள் சரியாகப் பின்பற்றுவது இல்லை. இதனால், குறைந்திருந்த கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தில்லியில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தாலும், மக்கள் கரோனா பாதிப்பு தொடா்பாக மெத்தனமாக இருக்கக் கூடாது. கூட்டமாக கூடுவதை தவிா்த்துக் கொள்ள வேண்டும். சந்தைப் பகுதிகள் உள்பட மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இது தொடா்பாக மருத்துவா் ரிச்சா சரீன் கூறுகையில் ‘கடந்த மூன்று நாள்களாக தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இம்மாதத் தொடக்கத்தில் 94 ஆக இருந்த தினசரி கரோனா பாதிப்பு, வெள்ளிக்கிழமை 256 ஆக அதிகரித்துள்ளது. இது அபாயகரமானது. எங்கள் மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவா்கள், அண்மையில் பிற மாநிலங்களுக்கு பயணித்தவா்கள், அல்லது பிறந்தநாள் விழா,திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றவா்களாக உள்ளனா் என்றாா் அவா்.

தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததைத் தொடா்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நடுப்பகுதியில், தில்லியில் கரோனா பாதிப்பை முற்றாக தோற்கடித்து விட்டோம் என்று தில்லி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.