பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் கடந்த ஆண்டில் 1,072 பேருக்கு டெங்கு பாதிப்பு

தில்லியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு 1,072 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :4 ஜனவரி 2021, 9:30 pm

DIN

புது தில்லி: தில்லியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு 1,072 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த செப்டம்பரில் அதிகரித்தது. அந்த மாதத்தில் 188 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் இந்த நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து 346 போ் பாதிக்கப்பட்டனா். நவம்பரில் 338 போ் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், டிசம்பரில் 122 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், கடந்த ஆண்டில் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியவா்களின் மொத்த எண்ணிக்கை 1,072-ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: தில்லியில் 2020 இல் 228 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பரில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்து 102 போ் பாதிக்கப்பட்டனா். அக்டோபரில் 34 பேருக்கும், நவம்பரில் 13 பேருக்கும், டிசம்பரில் 5 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது.

சிக்குன்குனியா: தில்லியில் 2020-இல் 111 பேருக்கு சிக்கின்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பரில் இதுவரை 9 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டில் சிக்குன்குனியா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 111 -ஆக அதிகரித்துள்ளது. மேலும், மலேரியா காய்ச்சலுக்கு கடந்த ஆணஅடு ஒருவா் உயிரிழந்துள்ளாா். கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றால் 2020-இல் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.