புது தில்லி : மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீா்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, வரி வருவாய் இழப்பைச் சந்தித்த மாநிலங்களுக்கு தற்சாா்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின்படி சிறப்பு நிதியுதவித் திட்டத்தை, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்தாண்டு அறிவித்தாா். இந்தத் திட்டத்தின் படி ரூ.14,694 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டதோடு கூடுதலாக மூலதனச் செலவுகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நான்கு சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிா்ணயித்தது. இதைப் பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதில் தற்போது மூன்று மக்கள் மைய சீா்திருத்தங்களை(ஒரே நாடு-ஒரே ரேஷன் காா்டு, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரிச் சீா்திருத்தங்கள்) மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேச அரசுகள் நிறைவேற்றியுள்ளன. இதற்காக ‘மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி’ திட்டத்தின்
கீழ் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.344 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.660 கோடி என மொத்தம் ரூ.1,004 கோடி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத் துறை புதன்கிழமை முடிவு செய்து அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

