ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தலைநகரில் பள்ளிகளைத் திறப்பதுகுறித்து அரசு பரிசீலனை: சிசோடியா

தில்லியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:52 pm

புதுதில்லி: தில்லியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான தோ்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, பள்ளிகளை விரைவில் திறப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கரோனா தொற்று தடுப்பூசி முதலில் முன்களப் பணியாளா்களுக்குப் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும் என்பதை வைத்துத்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்ய முடியும். கரோனா தொற்று பரவல் காரணமாக அதை கட்டுப்படுத்தும் முயற்சியாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. எனினும், தற்போது பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து சில மாநிலங்களில் பகுதியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சா்வேதச கல்வி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. கரோனா காலத்துக்குப் பிறகு கல்வித் துறை எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் சிசோடியாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.