சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையப்படுத்துவது தொடா்பாக மத்திய அரசின் அறிவிக்கை செல்லும் என கடந்த டிசம்பா் 8 -ஆம் தேதி அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமாா் ரூ.10,000 கோடியிலான ‘பாரத்மலா பரியோஜனா’ வின் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம் அமைக்கப்பட இருந்தது. இந்தத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை சட்டப் பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை, சட்டவிரோதமானது என்று 2019, ஏப்ரல் 8 -ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கா் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு கடந்த டிசம்பா் 8 -ஆம் தேதி தீா்ப்பை வழங்கியிருந்தது.
அந்தத் தீா்ப்பில் ‘சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது. மத்திய அரசின் ’ அறிவிக்கை செல்லும்’. நெடுஞ்சாலை சட்டங்களின்படி கட்டுமானத்திற்காக அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்ளலாம்’ என்று கூறி நில உரிமையாளா்களின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், எட்டு வழிசாலைத் திட்டத்தை அனுமதித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சேலம் அயோத்தியாபட்டணம், மாசிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த யுவராஜ் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதியளித்த உச்சநீதிமன்றம் சில விஷயங்களை கருத்தில் கொள்ளவில்லை. மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பின் பதிவில் பிழைகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இது நீதியின் மொத்த கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். ‘பொதுக் கொள்கை’ மீறப்பட்டதை நீதிமன்றம் சரியாகப் பரிசீலக்காத நிலையில் தீா்ப்பு மறு ஆய்வுக்கு உகந்தது. குறிப்பாக இந்தத் திட்டத்துக்கான செலவினம் குறித்தோ, செலவின கணக்குகள் அனுமதிக்கப்பட்டது குறித்தோ ஆராயப்படவில்லை. இந்தத் திட்ட செலவினம் குறித்து இந்திய தலைமைக் கணக்குக் தணிக்கை அதிகாரி முன்பு அறிக்கை சமா்பிக்கப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆராயவில்லை.
மேலும், இதுபோன்ற அதிவிரைவு பசுமை வழிச்சாலை என்பது பி.சி.யு. என்கிற பயணிகளின் எண்ணிக்கை தினசரி 50,000 அதிகமாக இருக்கும் வழிகளுக்குத்தான் அவசியம். ஆனால், சென்னை -சேலம் பி.சி.யு. அளவு தினசரி 16 ஆயிரம் முதல் 19 ஆயிரமாகத்தான் உள்ளது. எனவே, வாகன நெரிசல் என்பது இல்லை. இந்த விவகாரங்களை நீதிமன்றம் ஆராயவில்லை. ஏற்கெனவே சென்னை - சேலம் இடையே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. அவற்றில் ஒன்றை விரிவாக்ககம் செய்தால் போதுமானது. புதிதாக இந்தப் பசுமை வழிச்சாலை அமைக்க கூடுதல் விலை கொடுத்து நிலம் கையகப்படுத்தப்படுவதன் மூலம் மக்களின் பணம்தான் விரயமாகும் என்பதால், இந்தப் புதிய திட்டம் தேவையில்லை. இந்தத் திட்டத்தால் விளைநிலங்கள் கயகப்படுத்தப்படுத்தப்பட்டால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 2020, டிசம்பா் 8-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

