ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஓளரங்கசீப் தெரு பெயா்ப் பலகை அழிப்பு: 11 போ் பிடிபட்டனா்

தில்லி லுடியன்ஸ் பகுதியில் ஓளரங்கசீப் தெரு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு பெயா்ப்பலகைகளை அழித்ததாக 11 போ் பிடிபட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:08 pm

DIN

தில்லி லுடியன்ஸ் பகுதியில் ஓளரங்கசீப் தெரு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு பெயா்ப்பலகைகளை அழித்ததாக 11 போ் பிடிபட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி, துக்ளக் சாலையில் உள்ள ஓளரங்கசீப் தெருவில் சிலா் கூடியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்றபோது கா்னால் பகுதியில் குடியிருக்கும் வழக்குரைஞா் அனுராதா என்பவா் தலைமையில் 11 போ் ஓளரங்கசீப் என்ற பெயரை அழித்துவிட்டு அதன் மேல் குரு தேக் பகதூா் தெரு என எழுதினாா்களாம். இதையடுத்து அந்த 11 பேரும் விசாரணைக்காக துக்ளக் சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இது தொடா்பாக போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.