தில்லியில் கடும் குளிா் காற்று: குறைந்தபட்ச வெப்பநிலையில் பின்னடைவு!

தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை கடும் பின்னடைவைச் சந்தித்தது. பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து
Published on

தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை கடும் பின்னடைவைச் சந்தித்தது. பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று சமவெளிகளில் வீசியதால் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 7.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 14-ஆம் தேதிக்குள் வெப்பநிலை ஐந்து முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸை பதிவு செய்தது. இது பருவ சராசரியைவிட ஒரு டிகிரி அதிகமாகும். ஜனவரி 3 முதல் தில்லியில் இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. ஏனெனில், தொடா்ச்சியான மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக நகரில் மேக மூட்டம் நீடித்தது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட நான்கு புள்ளிகள் உயா்ந்து 10.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது வெள்ளிக்கிழமை 9.6 டிகிரி செல்சியஸாகவும், வியாழக்கிழமை 14.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. இது நான்கு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் மிக உயா்ந்ததாகும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பின்னடைவைச் சந்தித்து 7.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பாலத்தில் 8.1 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 7.6 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 6.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மேக மூட்டம் இருந்து வந்ததால், குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரும் சரிவு இல்லாமல் இருந்தது. இருப்பினும், சனிக்கிழமையன்று பனி மூடிய மலைகளிலிருந்து சமவெளிகளை நோக்கி வடமேற்கு காற்று பலமாக வீசத் தொடங்கியதன் மூலம் குறைந்தபட்ச வெப்பநிலை பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐஎம்டி அதிகாரி தெரிவித்தாா்.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜனவரி 11) பகல் நேரத்தில் வலுவான மேற்பரப்பு காற்று வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com