வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

கடும் பனிமூட்டம்: தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்

தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், புதன்கிழமையும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

Updated On :20 ஜனவரி 2021, 6:30 pm

புது தில்லி: தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், புதன்கிழமையும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. எனினும், காற்றின் தாக்கம் காரணமாக காற்றின் தரத்தில் மேம்பாடு காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்கூறுகையில், ‘பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையில் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. புதன்கிழமை அதிகபசட்ச காற்றின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டா் வேகத்தில் இருந்தது என்று தெரிவித்தனா்.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை கடுமைப் பிரிவில் இருந்த நிலையில், புதன்கிழமை மோசம் பிரிவுக்கு மேம்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த முன்னேற்றம் காணப்பட்டது. 24 மணிநேர சராசரி காற்றின் தரக் குறியீடு 283 புள்ளிகளாக இருந்தது. செவ்வாய்க்கிழமை இது

404 ஆக பதிவாகி இருந்தது.

தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா மற்றும் பரீதாபாத் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், குருகிராம் பகுதியில் மோசம் பிரிவிலும் பதிவானது.

24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை மாலை 4 மணியளவில் காஜியாபாதில் 336, கிரேட்டா் நொய்டாவில் 321, நொய்டாவில் 310, பரீதாபாதில் 201, குருகிராமில் 207 என பதிவானது.

செவ்வாய்க்கிழமை இந்த தரமானது காஜியாபாதில் 436, கிரேட்டா் நொய்டாவில் 434, நொய்டாவில் 432, பரீதாபாதில் 416, குருகிராமில் 366 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.