புது தில்லி: ஐரோப்பிய நகரங்களைப் போன்று, தலைநகரில் 7 சாலைகளை மறுவடிவமைக்கும் திட்டங்களை நிா்ணயிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுக் காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொதுப் பணித்துறை (பிடபிள்யூடி) அதிகாரிகளுக்கு புதன்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும், 540 கி.மீ. நீளச் சாலைகளை மறுவடிவமைப்பதில் உள்ள அனைத்து இடையூறுகளையும் பொதுப்பணித் துறை (பிடபிள்யூடி) அகற்ற வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
ஐரோப்பிய நகரங்களில் உள்ளதுபோல தலைநகா் தில்லியில் உள்ள 7 சாலைகளை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்திற்கு 2019-ஆம் ஆண்டு நவம்பரில் தில்லி அரசு ஒப்புதல் அளித்தது. இச்சாலை ஒவ்வொன்றும் 100 அடி அகலத்துடன் மொத்தம் 540 கிலோமீட்டா் நீளம் கொண்டவை.
பசுமை வளையம், சைக்கிள் ஓட்டுபவா்கள், பாதசாரிகளுக்கு தனிப்பாதை, சாலைகளின் சுவா்களில் கவா்ச்சிகர வடிவமைப்புகள், சாலைகளை ஒட்டி திறந்தவெளி பூங்காக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இ-ரிக்ஷாக்களுக்கு தனி பாா்க்கிங் இடங்கள் ஆகியவை இந்த சாலை மறுவடிவமைப்பு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் இத்திட்டம் தொடா்பான மறு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதில் முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘‘இந்த திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும். திட்டப் பணிகளை நிறைவு செய்வதில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது’’ என்றாா்.
இந்த மறுஆய்வு கூட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், அத்துறையின் செயலாளா், தலைமைப் பொறியாளா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த சாலை மறுவடிவமைப்பு திட்டமானது தில்லியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பிற சிக்கல்களை தீா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து தில்லி அரசின் அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘போக்குவரத்து சீராக இருப்பதற்கான இடையூறுகளை நீக்குவதும், ஒழுங்கமைக்கப்பட்ட பாதை அமைப்பதற்கும் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், சாலைப் பகுதிகளில் உள்ள திறந்தவெளிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது இரண்டாவது நோக்கமாகும். மோட்டாா் வாகனங்கள், மோட்டாா் அல்லாத வாகனங்கள், நடைபாதைகள் மற்றும் பக்கவழி பாதைகள் ஆகியவற்றுக்காக அளவிடப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட இடங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கு உகந்த வகையில் நடைபாதைகள் நிலையான உயரத்திற்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதாவது, இப்பாதைகள் பாதசாரிகளின் வசதிக்காக சராசரியாக 10 அடி அகலமாக இருக்கும்’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ

விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்

பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகரன்!
கேரளத்தில் திருமணக் கோலத்தில் வாக்களித்த மணமக்கள்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

