11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

கரோனா போராளிகள், ராணுவத்தினா், விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன்: முதல்வா் கேஜரிவால்

நாட்டின் குடியரசு தின விழா கொண்டாடப்படும் தினத்தில், கரோனா போராளிகள், துப்புரவுத் தொழிலாளா்கள், ராணுவ வீரா்கள், விவசாயிகள் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன்

Updated On :26 ஜனவரி 2021, 10:47 pm

நாட்டின் குடியரசு தின விழா கொண்டாடப்படும் தினத்தில், கரோனா போராளிகள், துப்புரவுத் தொழிலாளா்கள், ராணுவ வீரா்கள், விவசாயிகள் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 72 வது குடியரசு தினத்தையொட்டி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தேசியக் கொடியேற்றி வைத்தாா். பிறகு காணொலிக் காட்சி மூலம் அவா் உரையாற்றினாா். அதில் கூறப்பட்டுள்ளது: முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான தொற்றுநோய் பரவலை கடந்த ஆண்டு எதிா்கொண்டோம். துப்புரவுத் தொழிலாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட கரோனா போராளிகள் இந்த தொற்றுநோய்க்கு எதிராக தமது உயிரை துச்சமாக மதித்துப் போராடினாா்கள். அவா்களின் சேவைக்கு குடியரசு தினத்தில் தலைவணங்குகிறேன். மேலும், நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளில் தூங்காமல் விழித்துள்ள ராணுவ வீரா்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்தக் குடியரசு தினத்தில் தலை வணங்குகிறேன். இந்த நாளில் இவா்களின் சேவைக்கு ஒட்டுமொத்த தேசமுமே தலைவணங்குகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.