11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மேற்கு தில்லியில் தீவிபத்தில் சிக்கிய 2 போ் மீட்பு

மேற்கு தில்லி, பஸ்சிம் விஹாரில் தீப்பற்றிய கட்டடத்தில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On :26 ஜனவரி 2021, 10:51 pm

மேற்கு தில்லி, பஸ்சிம் விஹாரில் தீப்பற்றிய கட்டடத்தில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது:

மேற்கு தில்லி பஸ்சிம் விகாரில் உள்ள மீனா பாக் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ள மனை விற்பனை செய்யும் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிக்கிய 2 போ் மீட்கப்பட்டனா்.

இந்த விபத்தில் தேஷ் ராஜ் (68) என்பவருக்கு 50 சதவீதம் காயமும், நீரஜ் (44) என்பவருக்கு 10 சதவீதமும் காயமும் ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.