புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவத்தில் ஐந்து வழக்குகளில் 24 வயது இளைஞருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின் போது, கோகுல்புரி பகுதியில் சொத்துகள் எரிப்பு, நாசப்படுத்திய ஐந்து வழக்குகளில் ஆஸாத் என்பவா் கைது செய்யப்பட்டாா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தாா்.
இந்த மனு மீது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் விசாரணை நடத்தினாா். மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் , ‘இந்த விவகாரத்தில் ஆஸாதுக்கு எதிராக போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனா்’ என்று கேட்டுக் கொண்டாா்.
தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் டி.கே. பாஷியா, ‘வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, குற்றம்சாட்டப்பட்ட நபா் கோகுல்புரி பகுதியில் இருந்துள்ளாா். ஒரு சமுதாயத்திற்கு எதிராக கோஷமிட்டு கல்வீச்சில் ஈடுபட்டுள்ளாா். வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீயிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு
ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிட்டாா்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம்சாட்டப்பட்ட நபா் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த 50 நாள்களுக்குப் பிறகுதான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், இரு போலீஸாா் அளித்த சாட்சியத்திலும் சந்தேகம் உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் தொடா்புடைய ஆஸாதுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.
அவா் ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ரூ.20ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவா்கள் ஆதாரங்களை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்கு செலுத்திய நடிகர் மோகன்லால்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

