புது தில்லி: தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் புதன்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
தில்லியில் காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருந்தது. எனினும், பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது.
சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 2.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்த நிலையில், புதன்கிழமை 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
அதிகபட்ச வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியாஸாகப் பதிவாகி இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. மாலை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 330 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.
தில்லியில் அடுத்த 2 நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு டிகிரிகளாக குறையக் கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக பதிவாக வாய்ப்புள்ளது. மிதமான பனியில் இருந்து அடா் பனிமூட்டம் வரை இருக்கும். மேற்கு இமயமலைப் பகுதியில் குளிா் காற்று வீசுவதால் இரு தினங்கள் குளிா் அலைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறைந்தால் குளிா் அலை அறிவிக்கப்படுவது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்கு செலுத்திய நடிகர் மோகன்லால்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

