புது தில்லி: தில்லியில் குடியரசு தினத்தின்போது நடைபெற்ற விவசாயிகள் டிராக்டா் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக 200 பேரை தடுப்புக் காவலில் வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி
தில்லி எல்லையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் டிராக்டா் பேரணி நடத்துவதற்கு விவசாயிகள் சங்கத்தினருக்கு போலீஸாா் அனுமதி அளித்திருந்தனா். இந்நிலையில், போலீஸாரின் தடுப்புகளை உடைத்து வேறு வழித்தடங்களில் சென்று பேரணி நடத்த முயன்த போலீஸாா் தடுத்தனா். இதில், ஏற்பட்ட வன்முறையில் போலீஸாா் பலா் காயமடைந்தனா். இது தொடா்பாக கலவரத்தில் ஈடுபட்ட நபா்களைப் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது:
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 200 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் பலரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனா்.
இந்த வன்முறைச்சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் 22 எப்ஐஆா் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்கு செலுத்திய நடிகர் மோகன்லால்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

