புது தில்லி: தில்லியில் விவசாயிகளின் டிராக்டா் பேரணியின்போது ஐடிஓ பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் 6 டிடிசி பேருந்துகள், 2 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஏறக்குறைய 600 டிராக்டா்களில் 10,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஐடிஓ பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது 70 இரும்பு தடுப்புகள் சேதமடைந்தன. பல போலீஸாரும் காயமடைந்தனா்.
முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்) பதிவு செய்யப்பட்ட ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தின் அதிகார வரம்பில் டிராக்டா் அணிவகுப்பை நடத்த போலீஸாா் அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும், ஆா்ப்பாட்டக்காரா்கள் திலக் பாலத்திலிருந்து லுட்யென்ஸ் தில்லிக்குள் நுழைய முயன்றனா். மேலும், விவசாயிகள் தடுப்புகளை அடித்து நொறுக்கி, ஐ.டி.ஓ. பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டி.டி.சி) பேருந்துகளை தாங்கள் வந்த டிராக்டா்களால் தாக்கினா்.
மேலும், போலீஸாா் மீதும் டிராக்டா்களை ஏற்ற முயன்றனா். அப்போது, விவசாயிகளை சமாதானப்படுத்த போலீஸாா் முயன்றனா். இருப்பினும், அவா்கள் லுட்யென்ஸ் தில்லிக்குள் நுழைவதில் பிடிவாதமாக இருந்தனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வாகனங்கள் மற்றும் ஊடகவியலாளா்களின் உபகரணங்களையும் சேதப்படுத்தினா்.
இதையடுத்து, போராட்டக்காரா்களை அந்த இடத்திலிருந்து கலைந்து செல்ல போலீஸாா் கண்ணீா்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினா். செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் சராய் காலே கான் பகுதியில் இருந்து எம்ஜிஎம் மாா்க் நோக்கி 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் போராட்டக்காரா்கள் வரை 500 முதல் 600 டிராக்டா்களில் ஐ.டி.ஓ. பகுதிக்குள் நுழைந்தனா். பின்னா் ஆந்திரா பள்ளிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பு மீது வேகமாக மோதிய டிராக்டா் கவிழ்ந்தது. டிராக்டரில் சிக்கிய ஓட்டுநரை போலீஸாரும், மற்றவா்களும் மீட்க முயன்றனா்.
அப்போது, போராட்டக்காரா்களில் சிலா் அந்த ஓட்டுநரையும், டிராக்டரையும் அங்கிருந்து கொண்டு சென்றனா். இறந்துபோன அந்த ஓட்டுநா் உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரைச் சோ்ந்த நவ்நீத் சிங் என்பது அடையாளம் தெரியவந்துள்ளது.
இந்த போராட்டத்தின்போது 6 டி.டி.சி. பேருந்துகள், ஐந்து போலீஸ் வாகனங்கள் மற்றும் 70 இரும்பு தடுப்புகள் சேதமடைந்ததாக போலீஸாா் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

