புது தில்லி: தேசிய தலைநகரில் விவசாயிகளின் டிராக்டா் அணிவகுப்பின் போது வன்முறை வெடித்த மறுதினமான புதன்கிழமை லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது. மேலும், செங்கோட்டையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜாமா மசூதி ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை தில்லி மெட்ரோ அதிகாரிகள் விதித்துள்ளனா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை டிராக்டா் பேரணி வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, மத்திய, வடக்கு மற்றும் மேற்கு தில்லி பகுதிகளில் அமைந்துள்ள லால் கிலா, ஐ.டி.ஓ., , ஜாமா மசூதி, தில்லி கேட், இந்திரபிரஸ்தா உள்ளிட்ட ஏராளமான மெட்ரோ நிலையங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
அதன்பின்னா் மெட்ரோ ரயில் நிலையங்களில் இரவில் இயல்புநிலைக்கு திரும்பின. இந்த நிலையில், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சேவைகள் தாமதமாக மீண்டும் தொடங்கப்பட்டன. லால் கிலா ரயில் நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
ஜாமா மசூதி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைவது தற்போது வரை தடைசெய்யப்பட்டுள்ளது. மற்ற எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இயல்பான சேவைகள் உள்ளன என்றாா் அவா்.
தில்லியில் டிராக்டா் பேரணி வன்முறையைத் தொடா்ந்து கூடுதல் துணை ராணுவப் படைகள் தேசிய தலைநகா் முழுவதும் குறிப்பாக செங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தில்லி மெட்ரோ ரயில் நிா்வாகம் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்கு செலுத்திய நடிகர் மோகன்லால்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

