கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

தில்லியில் புதிதாக 199 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை 199 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,524-ஆக உயா்ந்துள்ளது.

Updated On :28 ஜனவரி 2021, 6:24 pm

புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை 199 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,524-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 57,993 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 31,247 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 26,746 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.34 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,835-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 119 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,22,114-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 1,575 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 645 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 8,018 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.