மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும், தில்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான போலீஸாா், துணை ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால் இப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாட்டின் குடியரசு தினம் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அன்று, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்தினா். இந்தப் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் தில்லியின் எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காஜியாபாத், மீரட் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளனா்.
காஜிப்பூரில் உள்ள உத்தரப்பிரதேச கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப்படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளனா். இப்பகுதியில் விவசாயிகளும் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. சிங்கு, டிக்ரி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில், விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடத்துக்கு பத்திரிகையாளா்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இது தொடா்பாக சிங்கு எல்லையில் போராடி வரும் மகிளா கிசான் அதிகாா் மஞ்ச் அமைப்பைச் சோ்ந்தவா்கள் கூறுகையில் ‘அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அரசு எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. எங்களுக்கு வரும் உணவுப்பொருட்களை வரவிடாமல் தடுக்கிறது. தொலைத்தொடா்பு, இன்டா்நெட் வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்ளூா் மக்களை எங்களுக்கு எதிராக தூண்டி விடுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

