கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

வடகிழக்கு தில்லி வன்முறை: தேவாங்கனா கலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) கைதான ஜேஎன்யூ மாணவரும்,

Updated On :29 ஜனவரி 2021, 5:45 pm

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) கைதான ஜேஎன்யூ மாணவரும், பிஞ்ச்ரா தோட் அமைப்பின் உறுப்பினருமான தேவாங்கனா கலிதாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், இந்த வழக்கு பெரிய அளவிலான சதி தொடா்புடையதாக உள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளது. மேலும், இந்த வழக்கில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள் சரியாக பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரிமைத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போராட்டமானது, வன்முறைக்கு விதிட்ட கலவரம், மோதல் செயல்பாடுகளுடன் இணைந்திருப்பது இந்தியாவுக்கு எதிரான விரோதம் தொடா்புடையதாக உள்ளது எனக் கூறி கலிதாவின் ஜாமீன் மனுவை நீதிபதி வியாழக்கிழமை தள்ளுபடி செய்தாா்.

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கலிதா கைது செய்யப்பட்டிருந்தாா்.

முன்னதாக, விசாரணையின்போது கலிதாவின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அதித் புஜாரி வாதிடுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட மனுதாரா் ஒரு ஹிந்துவாக இருக்கும்போது வன்முறைக்கு ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், தனது சொந்த சமுதாயத்திற்கு எதிராக முஸ்லிகளை தூண்டுவதன் மூலம் ஏன் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று கேள்வி எழுப்பினாா்.

போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அமித் பிரசாத், கலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்தாா்.

வன்முறையைக் கட்டவிழ்த்துவிட ஜஹாங்கிா்புரியில் இருந்து பெண் ஆா்ப்பாட்டக்காரா்களை சோ்க்க பிறருடன் கலிதா சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.