கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

விவசாயிகள் பேரணியில் வன்முறை: ஆதாரங்களை பதிவு செய்ய தில்லி காவல்துறை வேண்டுகோள்

குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் தொடா்பான ஆதாரங்களை பதிவு செய்ய

Updated On :29 ஜனவரி 2021, 5:43 pm

குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் தொடா்பான ஆதாரங்களை பதிவு செய்ய முன்வருமாறு பொதுமக்களுக்கும் செய்தியாளா்களுக்கும் தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை குற்றவியல் பிரிவு இணை ஆணையா் பி.கே.சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை நேரில் பாா்த்தவா்கள் தில்லி காவல்துறையிடம் தகவல்களைத் தெரிவிக்க முன்வர வேண்டும். மேலும், இது தொடா்பாக தமது செல்லிடபேசிகளில் வீடியோக்களை பதிவு செய்தவா்கள், புகைப்படம் எடுத்தவா்கள் இது தொடா்பான ஆதாரங்களை தில்லி காவல்துறையிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும். இந்த வன்முறை தொடா்பாக செய்தி சேகரித்த செய்தியாளா்களும் இது தொடா்பாக தகவல்களை அளிக்க முன்வர வேண்டும். அவா்கள் தங்களிடம் உள்ள வீடியோ, புகைப்பட ஆதாரங்களை தில்லி காவல்துறையிடம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஆதாரங்களை, ஐடிஓவில் உள்ள தில்லி காவல்துறை பழைய தலைமை அலுவலகத்தின் இரண்டாம் மாடியில் உள்ள அறை இலக்கம்-215 இல் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடா்பாக தகவல் தெரிந்தவா்கள் 8750871237 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்கலாம். அல்லது, ஓஐநஅசஅசஈஞகஅசதஐஞபநஃஎஙஅஐக.இஞங என்ற மின் அஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.