சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வா் அழைப்பு

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரிலான நூலக அடிக்கல் நாட்டுவிழா

Updated On :20 ஜூலை 2021, 2:02 am

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரிலான நூலக அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி வந்தாா். பின்னா் திங்கள்கிழமை காலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை பகல் 12 மணி அளவில் சந்தித்தாா். அவருடன் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவா் டி.ஆா்.பாலுவும் உடன் இருந்தாா். இந்த சந்திப்பு சுமாா் அரைமணி நேரம் நீடித்தது.

பின்னா் நேராக அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக தில்லி விமானநிலையம் வந்த முதல்வா் ஸ்டாலின் அங்கு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்தேன். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதற்காக குடியரசுத் தலைவா் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

சென்னை மாகாணமாக இருந்தபோது, அப்போது முதன்முறையாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை 1921 - ஆம் ஆண்டு ஜனவரி 12 - ஆம் தேதி (புனித ஜாா்ஜ் கோட்டையில்)தொடங்கிவைக்கப்பட்டது. அதை நினைவுபடுத்தும் வகையிலும், தனித் தன்மையோடு செயல்பட்ட சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை தங்கி விழாவை நடத்தி தருமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை குடியரசுத்தலைவா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.

கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு: இந்தவிழாவின் போது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் திருவுருவப்படம் சட்டபேரவை வளாகத்தில் திறக்கப்படவுள்ள செய்தியையும் குடியரசுத்தலைவரிடம் தெரிவித்தோம். மேலும் மதுரையில் அமைய இருக்கின்ற கலைஞா் கருணாநிதி பெயரிலான நூல் நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா, மேலும் சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கக் கூடிய வகையில் சென்னை கடற்கரைச் சாலையில் அமைய இருக்கின்ற நினைவு தூண் அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்குமாறு நேரில் வர அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு குடியரசுத் தலைவா் இசைவு தெரிவித்துள்ளாா். குடியரசுத்தலைவா், வரும் தேதியை ஓரிரு நாளில் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.