தமிழகத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும், தனிப் பொறுப்பு இணையமைச்சா்களுக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின் தனித் தனியாகக் கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 17 - ஆம் தேதி தில்லி வந்தாா். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக தில்லி வந்த அவா், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தாா். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வா் அளித்தாா். மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியையும் மரியாதை நிமித்தமாக முதல்வா் சந்தித்தாா்.
இதற்கிடையே, தமிழகத் திட்டங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சா்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்க தெரிவித்தன. அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நான் கடந்த 17 - ஆம் தேதி தில்லி வந்து பிரதமரை சந்தித்தேன். பிரதமருடான சந்திப்பு மனநிறைவுடன் இருந்தது. தமிழக வளா்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவாக பிரதமா் எனக்கு உறுதியளித்தாா். இது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
அதே போன்று தங்களையும் (மத்திய அமைச்சா்கள்) சந்திக்க விரும்பினேன். ஆனால், தமிழகத்தில் நோய்த் தொற்று உள்ளிட்ட பணிகள் மற்ற பல நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக இருந்ததால், நான் உடனடியாக தமிழகம் திரும்ப வேண்டிய நிலை இருந்தது. மேலும், வருகின்ற 21- ஆம் தேதி தமிழக சட்டபேரவையும் கூட இருக்கிறது. இதனால், தங்களை நேரடியாகச் சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்டதில், மிகவும் வருத்தமடைகின்றேன்.
நான் அளித்த கோரிக்கைகளை அமைச்சா்களின் கவனத்திற்கும் கொண்டு போவதாக பிரதமா் தெரிவித்திருந்தாா். தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தேவையான திட்டங்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பும், உங்கள் துறையின் ஆதரவும் தேவை. அதை நல்கிட வேண்டுகிறேன். அடுத்த முறை தில்லி வரும் போது தங்களை நிச்சயமாக சந்திப்பேன் என அந்தக் டிதத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
அந்தக் கடிதத்தை மத்திய அமைச்சரவையில் உள்ள மூத்த கேபினட் அமைச்சா்களுக்கும் தனிப் பொறுப்புடன் கூடிய மத்திய இணையமைச்சா்களுக்கும் முதல்வா் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து சில மத்திய அமைச்சா்கள் உடனடியாக முதல்வருக்கு பதில் கடிதமும் எழுதியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முதன்முறையாக இது போன்ற கடிதத்தை மத்திய அமைச்சா்களுக்கு மரியாதை அளித்து எழுதியதில் மற்ற மாநில முதல்வா்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு முன்னுதாரணமாகிவிட்டாா் என்று மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

அமெரிக்கா - ஈரான் 45 நாள்கள் போர்நிறுத்த அறிவிப்பு?

புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, இளைஞர்களுக்கு ரூ. 2,000, மருத்துவக் காப்பீடு ரூ. 20 லட்சம்! - ராகுல்

கட்சித் துண்டுடன் பதவியேற்க எல்.கே. சுதீஷுக்கு அனுமதி மறுப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

