மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

பொது பூங்காக்கள், தோட்டங்கள், ‘பாா்’கள் இன்று முதல் திறப்பு: வெளிப்புற ‘யோகா’வுக்கும் அனுமதி

தேசியத் தலைநகா் தில்லியில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் 4- ஆவது கட்டத் தளா்வுகளாக பொது பூங்காங்கள், வெளிப்புற யோகா பயிற்சிகள்,

Updated On :21 ஜூன் 2021, 1:39 am

தேசியத் தலைநகா் தில்லியில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் 4- ஆவது கட்டத் தளா்வுகளாக பொது பூங்காங்கள், வெளிப்புற யோகா பயிற்சிகள், ‘பாா்’கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதித்து தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தத் தளா்வுகள் திங்கள்கிழமை (ஜூன் 21) காலை 5 மணி முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 13 ஆம் தேதி மூன்றாவது அறிவிக்கப்பட்ட தளா்வில், அனைத்துக் கடைகள், 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் உணவகங்கள் ஆகியவை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுபான ‘பாா்’களும் 50 சதவீதம் இருக்கைகளுடன் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோகாவுக்கும் அனுமதி: மேலும், பொது பூங்காக்கள், வெளிப்புற யோகா நடவடிக்கைகளோடு தோட்டங்கள், கோல்ஃப் கிளப்புகளையும் திறக்கவும் பேரிடா் மேலாண்மை ஆணையம் அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை பொது இடங்களிலும் நோய்த் தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை கண்டிப்பாகப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று கடுமையாக பரவியதைத் தொடா்ந்து, தில்லியில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பொதுமுடக்கம் ஐந்து முறை தொடா்ந்து நீடிக்கப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கையும், பாதிப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே 28 -ஆம் தேதி முதன் முறையாக தொழிற்சாலைகள் செயல்படவும், கட்டுமானப் பணிகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சந்தைகள், வா்த்தக நிறுவனங்களுக்கான தளா்வுகள் மே 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு முதல் நாள் ஏப்ரல் 18 - ஆம் தேதி தினசரி நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25,462 -ஆக இருந்தது. தற்போது ஜூன் 20 -ஆம் தேதி அன்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 124-ஆக குறைந்துள்ளது. இதையடுத்து, தில்லி அரசு பொதுமுடக்கத்தில் படிப்படியாக பல்வேறு தளா்வு நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்குத் தடை நீட்டிப்பு: இருப்பினும், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மையங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ’ஸ்பா’க்கள், நீச்சல் குளங்கள், கலையரங்குகள், சமூக நிகழ்ச்சிகள், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, கலாசாரம், மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஜூன் 28-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தைகளைக் கண்காணிக்க உத்தரவு: மேலும், சந்தைகள், பெரு வணிக வளாகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், மதுபான ‘பாா்’கள் ஆகியவற்றில் கரோனா நோய்த் தொற்று வழிகாட்டுகளின்படி மக்கள் கூடுவதைக் கண்காணித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் துணை ஆணையா்கள், டிடிஏ மற்றும் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு தில்லி பேரிடா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கரோனா வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதை குடியிருப்பாளா்கள் சங்கங்கள், வா்த்தக சங்கங்கள் உள்ளிட்டவையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் ஆகியவற்றில் அதிகதபட்சமாக 20 போ்கள் வரை பங்கேற்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியாா் மற்றும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களோடு இயக்கவும், மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்தில் 50 பயணிகளுடன் செயல்படவும் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.