தில்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூா் எல்லை செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த எல்லை மீண்டும் மூடப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகல் கடந்த 3 மாதங்களாக தில்லி எல்லைகளான காஜிப்பூா், டிக்ரி, சிங்குா் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா். இதுவரை மத்திய அரசுடன் பல சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றாலும், இன்னும் சரியான முடிவு எடப்படவில்லை. இதனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் விவசாயிகள் டிராக்டா் பேரணியை நடத்தினா். அப்போது வன்முறை ஏற்பட்டது. இதில் போலீஸாா் பலா் காயமடந்தனா்.
இதைத் தொடா்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்- தில்லியை இணைக்கும் காஜிப்பூா் எல்லையை தில்லி காவல் துறை மூடியது. இந்த நிலையில், சுமாா் 35 நாள்களுக்கு பிறகு காஜியாபாத்- தில்லியை இணைக்கும் என்எச்-9 நெடுஞ்சாலையின் தில்லி-காஜியாபாத் வழி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் திறக்கப்பட்டது. பராமரிப்புப் பணிகளுக்காக இந்தச் சாலை திறக்கப்பட்டதாக தில்லி காவல் துறை தெரிவித்திருந்தது. இந்தச் சாலை வழியாக ஏராளமானோா் செல்லத் தொடங்கியதும் இந்தப் பாதையை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தில்லி காவல் துறை மூடியது. பாதை திடீரென திறக்கப்பட்டு, மூடப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்

திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


