கரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலத்தில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இதே காலத்தில் கரோனா பாதிப்பால் தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தில்லியில் கரோனா பாதிப்பு விகிதம் 0.36 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் மாா்ச் 5-ஆம் தேதி 0.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 545-இல் இருந்து 591 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி 585 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது ஜனவரி 4- இல் 384-ஆக குறைந்தது. இது மேலும் குறைந்து ஜனவரி 11-இல் 306-ஆக இருந்தது. இதையடுத்து, பிப்ரவரியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. பிப்ரவரி 26-ஆம் தேதி 256 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த மாதத்தில் ஏற்பட்ட அதிகூடிய கரோனா தினசரி பாதிப்பு இதுவாகும்.
பின்னா், பிப்ரவரி 27-ஆம் தேதி 243 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அன்று தில்லியில் கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 545-ஆக இருந்தது. அன்று, 647 கரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். பிப்ரவரி 28-இல் கரோனாா பதிப்பு 197 -ஆகக் குறைந்தது. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 556-ஆக அதிகரித்தது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 691-ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி தினசரி கரோனா பாதிப்பு 175-ஆகக் குறைந்தது. அன்று கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 596 -ஆகவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 739-ஆகவும் இருந்தது. ஆனால், மாா்ச் 2 முதல் மாா்ச் 5- ஆம் தேதி வரை தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. மாா்ச் 2- இல் தினசரி கரோனா பாதிப்பு 217 -ஆக இருந்தது. இது மாா்ச் 5-இல் 312-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், மாா்ச் 2-இல் 562-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை மாா்ச் 5-இல் 592-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை 777-இல் இருந்து 863-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தில்லியில் கடந்த ஜனவரி 14 -ஆம் தேதிக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமைதான் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி 340 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டாமல் இருந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை 261 பேராக இருந்த கரோனா பாதிப்பு, வெள்ளிக்கிழமை 312 -ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு

தொகுதி அலசல்: ஆத்தூர்! சாதனை வெற்றி மீண்டும் சாத்தியமா?

மதுரை அருகே இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

