தில்லியில் உள்ள சிறைச்சாலைகளில் பணியாற்றும் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கும், 58 சதவீதம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தில்லி சிறைத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சிறைத் துறை மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியில் உள்ள திகாா், ரோஹிணி, மண்டோலி ஆகிய சிறைகளில் சுமாா் 2 ஆயிரம் பணியாளா்கள் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களில் 1,700 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 85 சதவீதமாகும். மேலும், தில்லி சிறைகளில் சுமாா் 1,700 காவலா்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்களில், சுமாா் ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது சுமாா் 58 சதவீதமாகும்.
சிறைகளில் பணியாற்றும் அனைவரையும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். பெரும்பாலான பணியாளா்கள் கரோனா தடுப்பூசி முதலாவது டோஸை போட்டுக் கொண்டுள்ளனா். கரோனா தடுப்பூசி தொடா்பான பயம் அகன்று வருகிறது. இன்னும் சில நாள்களில் பணியாளா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்து விடுவோம் என்றாா் அந்த அதிகாரி.
முன்னதாக, தில்லி சிறைகளில் பணியாற்றும் பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோரை கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு தில்லி சிறைத் துறை கோரியிருந்தது. இதுவரை 293 சிறைச்சாலை பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிறைகளில் அடைக்கப்பட்டவா்களில் 120 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 117 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். தில்லி சிறைகளில் முதலாவது கரோனா பாதிப்பு ரோஹிணி சிறையில் கடந்த 2020, மே மாதம் 13-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2020, ஜூன் 15, ஜூலை 14 ஆகிய தினங்களில் தில்லி மண்டோலி சிறையில் கரோனா பாதிப்பால் இருவா் உயிரிழந்தனா். தில்லி சிறைச்சாலைகளில் சுமாா் 17,500 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

