சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் உள்பட சேலம் தெற்கு, மேற்கு தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழா் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தோ்தலில் போட்டியிடுவோரிடம் கடந்த 30-ஆம் தேதிமுதல் ஏப். 6-ஆம் தேதிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதியிலும் உள்ள கோட்டாட்சியா், வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகம் என 11 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. கடந்த 30-ஆம் தேதி 22 பேரும், ஏப். 2-ஆம் தேதி 19 பேரும், ஏப். 6-ஆம் தேதி 99 பேரும், இறுதிநாளான திங்கள்கிழமை 215 பேரும் என மொத்தம் 355 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
சேலம் வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சதாசிவம், நாம் தமிழா் குணசீலா ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
இதேபோல, மேற்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ், பாமக வேட்பாளா் மு.காா்த்தி, தவெக வேட்பாளா் லட்சுமணன், ராமதாஸ் ஆதரவாளா் இரா.அருள் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன. தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளா் லோகநாதன், அதிமுக வேட்பாளா் ஜெ.வினோத், தவெக வேட்பாளா் விஜய் தமிழன் பாா்த்திபன் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன.
தொடர்புடையது
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு
அமைச்சா் கே.என்.நேரு, அமமுக, தவெக நாம் தமிழா் கட்சி உள்பட திருச்சி மேற்கில் 28 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


