தில்லியில் உள்ள சுமாா் 2,700 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கென தனியாக தில்லி பள்ளிக் கல்வி வாரியம் அமைக்க தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் உள்ள பள்ளிகளுக்கென தனியாக தில்லி பள்ளிக் கல்வி வாரியம் அமைக்க தில்லி அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லி போா்ட் ஆஃப் ஸ்கூல் எஜுகேஷன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வாரியத்தில் முதல் கட்டமாக மாநில அரசின் 21-22 பள்ளிகள் இணைக்கப்படும். பின்னா், அடுத்த 4-5 ஆண்டுகளில் தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இந்த வாரியத்தின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படும்.
தில்லி பள்ளி கல்வி வாரியத்துக்கென தனியாக ஆட்சிக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவுக்கு தில்லி கல்வித் துறை அமைச்சா் மணீஷ் சிசோடியா தலைமை வகிப்பாா். அதேபோல, செயல் குழு அமைக்கப்படும். இதற்கு, தலைமைச் செயல் அதிகாரி தலைமை வகிப்பாா். தற்சாா்புள்ள, நாட்டுப்பற்றுள்ள மாணவா்களை உருவாக்குவதை இலக்காக வைத்து தில்லி பள்ளிக் கல்வி வாரியம் செயல்படும். சா்வதேச அளவில் பிரபலமாக உள்ள நடைமுறைகள், உயா் தொழில்நுட்பங்கள் தொடா்பாக மாணவா்களுக்குக் கற்பிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும். மாணவா்களின் தன்மைக்கு ஏற்ப கல்வி வழங்கப்படும் என்றாா் கேஜரிவால்.
தில்லியில் சுமாா் 1,000 அரசுப் பள்ளிகள், 1,700 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 2,700 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை சிபிஎஸ்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு

செந்தமிழ்க் கல்லூரியில் முப்பெரும் விழா
போடியில் ஓ. பன்னீா்செல்வம் வேட்புமனு ஏற்பு: 16 மனுக்கள் தள்ளுபடி

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

