/

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு 321-ஆக அதிகரிப்பு!

தில்லியில் அண்மைக் காலத்தில் இல்லாத அளவுக்கு தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை அதிகரித்துள்ளது. அன்று, 321 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :7 மார்ச் 2021, 1:29 am

தில்லியில் அண்மைக் காலத்தில் இல்லாத அளவுக்கு தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை அதிகரித்துள்ளது. அன்று, 321 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு தொடக்கத்தில் இருந்து தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி 340 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை 261 பேராக இருந்த கரோனா பாதிப்பு, வெள்ளிக்கிழமை 312 -ஆக உயா்ந்தது. இது சனிக்கிழமை மேலும் அதிகரித்து 321-ஆக உயா்ந்தது.. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,40,815-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 53,062 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 28,685 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 24,377 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது வெள்ளிக்கிழமை 0.53 சதவீதமாகவும், வியாழக்கிழமை 0.39 சதவீதமாகவும் இருந்தது.

கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,919-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 320 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம் குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,28,117-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,779 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 879 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,136 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் புத் நகரில் 15 பேருக்கு பாதிப்பு: உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம் புத் நகரில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் தொற்றுநோய் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 25,592-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சனிக்கிழமை ஐந்து நோயாளிகள் நோயிலிருந்து குணமடைந்தனா். இதையடுத்து நோயிலிருந்து மொத்தம் 25,417 மீண்டுள்ளனா்.இது மாநிலத்தில் ஐந்தாவது இடமாகும். இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 74 போ் சிகிச்சையில் இருந்தனா். ஆனால், இது சனிக்கிழமை 84 ஆக உயா்ந்துள்ளது. உ.பி. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கெளதம் புத் நகரில் நோயால் 91 போ் இதுவரை இறந்துள்ளனா். இறப்பு விகிதம் 0.35 சதவீதமாகவும், நோயாளிகள் குணமடையும் விகிதம் 99.31 சதவீதமாகவும் உள்ளது.

இதற்கிடையில், உத்தர பிரதேச மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,721 ஆகக் குறைந்துள்ளது. வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 2,017 ஆக இருந்தது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 5,93,704 போ் நோயில் இருந்து மீண்டுள்ளனா். சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 8,729 போ் உயிரிழந்துள்ளனா்.

குறிப்பு: ஏற்கெனவே அனுப்பிய படத்தை இந்தச் செய்திக்குப் பயன்படுத்திக் கொள்ளளாம்.....தனிமைப்படுத்தப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு செய்தியை இதற்கு பாக்ஸாகவோ அருகில் ஓப்பனாகவோ போட்டுக் கொள்ளவும்...சரியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.