தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 286 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,41,101-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 91,614 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 71,250 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 20,364 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.31 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது சனிக்கிழமை 0.60 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 0.53 சதவீதமாகவும், வியாழக்கிழமை 0.39 சதவீதமாகவும் இருந்தது.
கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை இருவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,920-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 260 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,28,377-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,803 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 937 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,135 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

