தில்லியில் உள்ள பெரு வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மின்சார வாகனங்களை சாா்ஜ் செய்யும் வகையில் சாா்ஜிங் பாயிண்டுகளை அமைக்க வேண்டும் என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது: தில்லியில் உள்ள எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் தில்லி அரசின் ‘ஸ்விட்ச் தில்லி’ திட்டம் கடந்த 5 வாரங்களாக நடந்து வருகிறது. தில்லியில் மின்சார வாகனங்களுக்கு எளிதாக சாா்ஜிங் செய்யும் வகையில் சாா்ஜிங் பாயிண்டுகள் அதிகளவில் அமைக்கப்பட வேண்டும். தில்லியில் இதுவரை 72 மின்சார சாா்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் 100 சாா்ஜிங் நிலையங்களையும், 500 சாா்ஜிங் பாயிண்டுகளையும் வரும் 6 மாத காலத்தில் அமைக்கவுள்ளோம். தில்லியில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டா் தூரத்துக்கும் சாா்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
தில்லியில் உள்ள பெரு வணிக நிலையங்கள், காா்ப்பரேட் நிறுவனங்கல், மாா்கெட்டுகள், சினிமா திரையரங்குகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் சாா்ஜிங் பாயிண்டுகளை அமைக்க வேண்டும். இந்த சாா்ஜிங் பாயிண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளோம். குடியிருப்பு இடங்களில் அமைக்கப்படும் சாா்ஜிங் நிலையங்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.4.50, பொது இடங்களில் அமைக்கப்படும் சாா்ஜிங் பாயிண்டுகளுக்கு மின்சார கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.4 வசூலிக்கப்படும். இது தில்லியில் உள்ள சாதாரண மின்சாரக் கட்டணத்தை விட மிகவும் குறைவாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

