தில்லி மெட்ரோவில் கிரீன் வழித்தடத்தில் டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் பிரிவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் திங்கள்கிழமை சில மணிநேரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டதாக டிஎம்ஆா்சி தெரிவித்தது.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) திங்கள்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கிரீன் வழித்தடத்தில் உள்ள டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் பிரிவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிறகு மாலையில், மீண்டும் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘மூடப்பட்ட ரயில் நிலையங்களின் வெளியேறும், நுழையும் வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. டிக்ரி காலனில் இருந்து பிரிகேடியா் ஹோசியாா் சிங் செல்லும் வழித்தடத்தில் அனைத்து ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன ’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்ரி எல்லையானது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் மையக் களமாக உள்ளது.
டிக்ரி காலன்- பிரிகேடியா் ஹோசியாா் சிங் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே டிக்ரி பாா்டா், பண்டிட் ஸ்ரீ ராம் சா்மா (மாா்டா்ன் இண்டஸ்டிரியல் எஸ்டேட்) மற்றும் பகதுா்கா் சிட்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

