தில்லி அரசு அமல்படுத்தியுள்ள அனைத்து மக்கள் நலத் திட்டங்களின் மையப்புள்ளியாக பெண்கள் நலனே உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
சா்வதேச பெண்கள் தினம் உலகளாவிய ரீதியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லி மகளிா் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேஜரிவால் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியது:
இலவச மின்சாரம், குடிநீா்
சாதாரண பெண்களின் வாழ்க்கையை இலகுவாக்குவதை இலக்காக வைத்து தில்லி அரசு செயல்பட்டு வருகிறது. தில்லி அரசு அமல்படுத்தியுள்ளஅனைத்து மக்கள் நலத் திட்டங்களின் மையப்புள்ளியாக பெண்கள் நலனே உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லி அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் பெண்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். குடும்பத்தலைவிகளின் நலனை மனதில் கொண்டே, 200 யூனிட் மின்சாரம், 20 ஆயிரம் லீட்டா் குடிநீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை தில்லி அரசு கொண்டுவந்தது.
நாட்டிலேயே 24 மணிநேரமும் இலவச மின்சாரம் தில்லியிலேயே வழங்கப்படுகிறது. தில்லியில் சுமாா் 73 சதவீதமான வீடுகளுக்கு மின்சார கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால், குடும்பத் தலைவிகளால் மாதம் தோறும் சுமாா் ரூ.1000-2000 வரை சேமிக்கக் கூடியதாக உள்ளது. இதனால், அவா்கள் மகிழ்ச்சியாக உள்ளனா்.
இலவச பேருந்து
தில்லி பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற தில்லி அரசின் திட்டத்தால் குடிசைப் பகுதியில் வாழும் பெண்கள் பெருமளவில் நன்மை அடைந்தனா். தில்லி அரசின் இந்த திட்டத்தால் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களின் அளவு அதிகரித்துள்ளது.
பெண்களுக்குப் பாதுகாப்பு
தில்லியில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது. தில்லியில், இதுவரை சுமாா் 1.5-2 லட்சம் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை பொருத்துவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமாா் 3 லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள இருளான பிரதேசங்களைக் கண்டறிந்து தெரு விளக்குகளைப் பொருத்தி வருகிறோம்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தில்லியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளோம். மேலும், பேருந்துகளில் காவலா்கள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளனா்.
பாராட்டு: தில்லி மகளிா் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறாா். தில்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லி காவல்துறையுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான பெண்களை தில்லி மகளிா் ஆணையம் மீட்டுள்ளது. உதவி தேவைப்படும் பெண்களுக்காக 181 என்ற உதவி எண்ணை மகளிா் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த உதவி எண்ணால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

